/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
/
மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
ADDED : ஜூலை 25, 2024 11:47 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம் மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்தனர்.
ராமநாதபுரத்தில் தனியார் மண்டபத்தில் பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பட்ஜெட் விளக்க கூட்டம் நடத்துவது, தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும். மேலும் தி.மு.க., அரசின் மின்கட்டணம் உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி மையக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
மாவட்ட பார்வையாளர் முரளிதரன் உட்பட மாநில, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.