/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இல்லம்தேடி கல்வி திட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு பயிற்சி
/
இல்லம்தேடி கல்வி திட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு பயிற்சி
இல்லம்தேடி கல்வி திட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு பயிற்சி
இல்லம்தேடி கல்வி திட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு பயிற்சி
ADDED : மார் 22, 2024 04:37 AM
ராமநாதபுரம்: -பாம்பன் தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வர்லர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது.
வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் தினேஷ் வரவேற்றார். மாவட்ட ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் லியோன் முதல் வாக்காளர், மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள், திருநங்கை போன்றவர்களிடம் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவிற்கான துண்டு பிரசுரங்களை வழங்குவது குறித்தும், தேர்தல் முறைகேடுகளை வெளிப்படுத்தும் சி விஜில் செயலியை பொதுமக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் விளக்கினார்.
நிறைவாக ஆசிரிய பயிற்றுநர் மாலதி நன்றி கூறினார்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர்கள் மீனாட்சி, சூசை மேற்பார்வையாளர் வனிதா, ஆசிரியப்பயிற்றுநர்கள் வீரஜோதி, தினேஷ், மாலதி செய்தனர்.