நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு பஸ் டிப்போ சி.ஐ.டி.யு., கிளை ஆலோசனை கூட்டம் நடந்தது.
காரைக்குடி மண்டல பொதுச்செயலாளர் தெய்வீர பாண்டியன் முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகளாக தலைவர் வடிவேல், செயலாளர் திருமலை தீனதயாளன், பொருளாளர் மாரீஸ்வரன், துணைத் தலைவர்கள் சகாயராஜ், ஜான் போஸ்கோ, ஜெகநாதன், முத்துமணி துணைச் செயலாளர்கள் கார்த்திகேயன், ஆரோக்கியசாமி, முனியசாமி தேர்வு செய்யப்பட்டனர்.

