ADDED : ஜூலை 08, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் சிறப்பு பட்டா குறை தீர்ப்பு முகாம் நடந்தது.
இதில் முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் பட்டா மாறுதல், பட்டா மேல் முறையீடு, கணினி திருத்தம், உழவர் அட்டை, தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் உள்ளிட்ட தொடர்பான மனுக்கள் அளித்தனர். சிறப்பு குறை தீர்ப்பு பட்டா முகாம் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்து அதிகாரியிடம் ஆலோசனை செய்தார்.
பின் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். உடன் ஆர்.டி.ஓ., சரவணபெருமாள், தாசில்தார் கோகுல்நாத் உட்பட அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.
