தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/செய்தி எதிரொலி/ உத்தரகோசமங்கை கண்மாய் கரையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

உத்தரகோசமங்கை கண்மாய் கரையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

உத்தரகோசமங்கை கண்மாய் கரையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி


PUBLISHED ON : ஜூலை 03, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்திரகோசமங்கை: - தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக உத்தரகோசமங்கை பாசன பெரிய கண்மாய் கரைப்பகுதியில் அடர்ந்து வளர்ந்த சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடக்கிறது.

உத்தரகோசமங்கை பாசன கண்மாய் 410 ஹெக்டேரில் உள்ளது. இங்கு கண்மாய் கரைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் 2019ம் ஆண்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் நீர் தேங்கும் வகையில் பக்கவாட்டு பள்ளங்கள் தோண்டப்பட்டது. இந்நிலையில் கண்மாயில் பெருவாரியான பகுதிகள் துார்வாரப்படாமல் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது.

ராமநாதபுரம் –உத்தரகோசமங்கை ரோட்டில் 2 கி.மீ.,க்கு சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கண்மாய் மேற்புறம் கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்றும் பணி நடந்து வருகிறது.

கண்மாய் சாலையோரப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும், வரத்து கால்வாய்களை முறையாக சீரமைத்து ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்குவதற்கு வழிவகை செய்ய பாசன பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

–––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us