ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஜூலை 07, 2026 03:52 PM
தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, சம்பை, கோப்பேரிமடம், நதிப்பாலம் மற்றும் வாலிநோக்கத்தில் உள்ள அரசு நிறுவன உப்பள பாத்திகளிலும் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முதல் தர உப்பு அயோடின் கலக்கப்பட்டு உணவுப் பொருள்கள் பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு தோல் பதனிடுதல், கருவாடு உலர்த்துதல் உள்ளிட்ட பயன்பாட்டிற்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் நிலவும் தொடர் வறட்சியால் வெயில் அதிகரித்துள்ளதால் உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்திக்கு ஏற்றவாறு உப்பள தொழிலாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
அதே நேரத்தில், உப்பு உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் உப்புகளை குவியலாக குவித்து வைத்து, விலை ஏற்றத்திற்காக காத்திருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
––
