தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தேவர்குறிச்சியில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி

தேவர்குறிச்சியில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி

தேவர்குறிச்சியில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி


ADDED : ஜூன் 11, 2026 04:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 04:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலாடி: கடலாடி அருகே தேவர்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 40 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 1 முதல் 5 வகுப்புகள் உள்ளன.இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடிநீர் வசதியின்று காணப்படுகிறது. மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி குடிநீர் வசதி செய்ய வேண்டும். கழிப்பறை வளாகங்கள் உள்ள நிலையில் தண்ணீர் வசதி இல்லாததால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே கடலாடி யூனியன் நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us