
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிேஷகம் நடந்தது. தளிர்மருங்கூர் உலகேஸ்வரர் கோயிலிலும் சங்காபிேஷகம் நடந்தது.
முன்னதாக 108 சங்குகளில் நீர் நிரப்பி யாகசாலையில் வைத்து வேள்வி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

