/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வந்தே மாதரம் 150 ம் ஆண்டு தனுஷ்கோடியில் விழா
/
வந்தே மாதரம் 150 ம் ஆண்டு தனுஷ்கோடியில் விழா
ADDED : நவ 14, 2025 01:53 AM

ராமேஸ்வரம்: வந்தே மாதரம் பாடல் 150ம் ஆண்டு நிறைவு விழா ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் என்.சி.சி., சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு என்.சி.சி., 9 பட்டாலியன் காரைக்குடி பிரிவு சார்பில் நடந்த இவ்விழாவில் ராமேஸ்வரம் அரசு பள்ளி, கேந்திர வித்யாலயா பள்ளி, அமிர்தா வித்யாலயா பள்ளி, காரைக்குடி செட்டிநாடு பள்ளி மாணவர்கள், மதுரை லேடிடோக் கல்லுாரி மாணவியர் பங்கேற்று வந்தே மாதரம் பாடலின் வரலாற்றுப்பெருமையை பாடினர்.
என்.சி.சி., குழு தலைமையக கர்னல் விஜயகுமார், என்.சி.சி., 9வது பட்டாலியன் காரைக்குடி பிரிவு லெப்ட்டின்ட் கர்னல் சி.பி.தாமஸ், பள்ளி என்.சி.சி., அலுவலர் பழனிசாமி, அமிர்தா பள்ளி முதல்வர் இந்திரா தேவி, இந்திய கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகள் பங்கேற்றனர்.

