ADDED : நவ 12, 2025 10:51 PM
ராமநாதபுரம்: வடகிழக்கு பருவமழை துவங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால் மக்களிடையே காய்ச்சல், சளி பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தேங்கியுள்ள மழைநீரில் கொசு உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரு வாரத்தில் 18 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர்கள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 பேருக்கும் அதிகமாக காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரு வாரத்தில் ராமநாதபுரத்தில் 3 பேருக்கும், பரமக்குடியில் 15 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒரே இடத்தில் இதுவரை டெங்கு பாதிப்பு கண்டறியப்படவில்லை. டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் நோய் பரவாத வகையில் சுகாதார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

