/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச் செயின் பறிப்பு
/
மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச் செயின் பறிப்பு
ADDED : நவ 14, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செட்டியகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சச்சிதானந்தம் 65. இவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள கண்மாயில் குளித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக டூவீலரில் சென்ற அடையாளம் தெரியாத இருவர் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் பேச்சுக் கொடுத்துள்ளனர்.
திடீரென மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு டூவீலரில் தப்பினர். இது குறித்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

