/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோரத்தில் தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளி கிணறு
/
ரோட்டோரத்தில் தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளி கிணறு
ரோட்டோரத்தில் தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளி கிணறு
ரோட்டோரத்தில் தடுப்புச் சுவர் இல்லாத திறந்த வெளி கிணறு
ADDED : நவ 14, 2025 04:02 AM

சாயல்குடி: சாயல்குடி அருகே மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் இல்லாமல் திறந்த வெளி கிணறு உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
மேலச்செல்வனுார் பறவைகள் சரணாலயம் வழியாக எம்.எஸ்.புதுக்குடியிருப்பு, எஸ்.ஆலங்குளம், கடலாடி உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்களில் தினமும் பலர் சென்று வருகின்றனர். சரணாலயத்திற்கு செல்லும் வழியில் ரோட்டோரத்தில் மூடப்படாமல் திறந்த நிலை கிணறு உள்ளது.
இதனால் விபத்து அபாயம் உள்ளது.எனவே 5 அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் அமைத்து திறந்த வெளியில் உள்ள கிணற்றை வலையிட்டு மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---