/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குடிநீர் வீணாகி சாலை சேதம்; வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் காவிரி குடிநீர் வீணாகி ரோடு சேதம்

ADDED : மார் 17, 2024 11:44 PM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் --அபிராமம் சாலை கொட்டக்குடி அருகே காவிரி குழாய் உடைந்து குடிநீர் வீணாகிவரும் நிலையில் சாலை சேதமடைந்துள்ளதால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துாரில் இருந்து ஆனைசேரி, நல்லாங்குளம், கொடுமலுார் வழியாக அபிராமம் செல்லும் முக்கியமான சாலையாக உள்ளது. கொட்டக்குடி முக்குரோடு அருகே சாலையோரத்தில் செல்லும் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. தற்போது குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் தார்சாலை சேதமடைந்துள்ளது.
இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே காவிரி குழாய் உடைப்பை சரி செய்தும் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.