/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
/
மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்ய விவசாயிகள் ஆர்வம்
ADDED : நவ 14, 2025 11:02 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக முண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் விவசாயத்தை போல் அதிக தண்ணீர் தேவை இல்லை.
லேசான ஈரப்பதத்திலும், வறட்சியிலும் அதிக மகசூல் கொடுப்பதுடன் குறைந்த செலவில் அதிக வருமானம் தருவது மிளகாய் சாகுபடி. மிளகாய் சாகுபடியில் இயல்பாகவே விவசாயிகள் அதிகம் ஆர்வம் செலுத்துவர்.
இங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் முளைத்த நெற்பயிர் களுக்கு போதிய மழையின்றி பாதிப்படைவதால் பெரும்பாலான விவசாயிகள் சூழ்நிலைக்கு ஏற்ப மிளகாய் நாற்றுகள் நடவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
அதனால் மேடான கண்மாய் கரைகள், சமமான மேட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் நாற்றுகளை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது உற்பத்தி செய்யப்படும் மிளகாய் நாற்றுகள் டிச., முதல் வாரத்தில் நடவு செய்வதற்கு ஏற்றதாக அமையும் என்பதாலும், தற்போது மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வரு கின்றனர்.

