/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் உரம் தட்டுப்பாடு தேவைக்கு வழங்க வலியுறுத்தல்
/
திருவாடானையில் உரம் தட்டுப்பாடு தேவைக்கு வழங்க வலியுறுத்தல்
திருவாடானையில் உரம் தட்டுப்பாடு தேவைக்கு வழங்க வலியுறுத்தல்
திருவாடானையில் உரம் தட்டுப்பாடு தேவைக்கு வழங்க வலியுறுத்தல்
ADDED : டிச 07, 2025 09:02 AM
திருவாடானை: திருவாடானை பகுதியில் யூரியா போன்ற உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மழைக்கு பின் விவசாயப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த உரங்களை தேவைக்கு ஏற்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. யூரியா போன்ற உரங்கள் பயிர்களின் வளர்ச்சி, மகசூலுக்கு கைகொடுப்பதால் வேளாண் துறையினர் பரிந்துரைப்படி விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். கூட்டுறவு சங்கங்களில் மானிய விலையிலும், தனியார் உரக்கடைகளிலும் இவ்வகையான உரங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் முறையாக உரம் கிடைப்பதில்லை.
யூரியா உரம் கேட்டால் வேறு உரம் வாங்க கடைக்காரர்கள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு கூறியதாவது:
யூரியா போன்ற உரங்கள் முறையாக கிடைப்பதில்லை. கூட்டுறவு சங்கங்களை அணுகும் போது அங்கு விவசாயிகள் கேட்கும் உரம் தேவைக்கு ஏற்ப இல்லை என கூறுகின்றனர்.
உரங்கள் தேவையான நேரத்துக்கு கிடைக்காததால் சாகுபடி செய்த பயிர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

