/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீன்பிடி படகு உரிமையாளர்கள் நவ.30க்குள் பதிவு செய்யுங்கள்
/
மீன்பிடி படகு உரிமையாளர்கள் நவ.30க்குள் பதிவு செய்யுங்கள்
மீன்பிடி படகு உரிமையாளர்கள் நவ.30க்குள் பதிவு செய்யுங்கள்
மீன்பிடி படகு உரிமையாளர்கள் நவ.30க்குள் பதிவு செய்யுங்கள்
ADDED : நவ 14, 2025 04:15 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டப்படி விசைப்படகுகள், நாட்டுபடகுகளை நவ.,30க்குள் உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 33 விசைப்படகுகள், 1456 நாட்டுப் படகுகளும் மற்றும் 497 இயந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளும் பதிவு செய்யாமல் இயக்கப்பட்டு வருவது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி குற்றம். பதிவு செய்யப்படாத நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை நவ., 30க்குள் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்படாத படகு உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் படகுகளை பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.