/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கவர்னர் ரவி சுவாமி தரிசனம்; மதுரை, ராமநாதபுரம் வருகை
/
கவர்னர் ரவி சுவாமி தரிசனம்; மதுரை, ராமநாதபுரம் வருகை
கவர்னர் ரவி சுவாமி தரிசனம்; மதுரை, ராமநாதபுரம் வருகை
கவர்னர் ரவி சுவாமி தரிசனம்; மதுரை, ராமநாதபுரம் வருகை
ADDED : மே 27, 2025 10:16 PM

ராமநாதபுரம் : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் கோயில்களில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மே 29 மதியம் 1:25 மணிக்கு புறப்படும் கவர்னர் ரவி அன்று மாலை 4:00 மணிக்கு ரங்கநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் மாலை 5:00 மணிக்கு சுவாமி தரிசனம் செய்கிறார்.
மே 30ல் திருச்சியிலிருந்து குணசீலம் பிரசன்னவெங்கடாஜலபதி கோயிலில் காலை 9:00 மணிக்கு தரிசனம் செய்கிறார். பின் கோயில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். ரோடு மார்க்கமாக கவர்னர் ரவி மதுரை வருகிறார். அங்கிருந்து மாலை 5:00 மணிக்கு ராமேஸ்வரம் வருகிறார். மே 31 அதிகாலை 5:15 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். காலை 7:00 மணிக்கு தனுஷ்கோடி செல்கிறார்.
மதியம் 1:30 மணிக்கு மதுரை திரும்புகிறார். பின் அங்கு 4:00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு 8:00 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார். கவர்னருடன் அவரது மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினர் வருகின்றனர்.

