ராமநாதபுரத்தில் கோயிலை இடிக்க எதிர்ப்பு: ஹிந்து முன்னணியினர் தர்ணா போராட்டம்
ராமநாதபுரத்தில் கோயிலை இடிக்க எதிர்ப்பு: ஹிந்து முன்னணியினர் தர்ணா போராட்டம்
ADDED : ஜூலை 08, 2026 11:33 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் முகவை ஊருணி அருகே அமைந்துள்ள ராஜகாளியம்மன் கோயிலை நீதிமன்ற உத்தரவில் நகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்தனர்.
அப்போது எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து ஹிந்து முன்னணியினர், பக்தர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் முகவை ஊருணி அருகேயுள்ள ராஜகாளியம்மன் கோயிலில் 40 ஆண்டுகளாக பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் ஊருணி கரை ஆக்கிரமிப்பில் உள்ளதால் கோயிலை அகற்றி நீதிமன்றம் உத்தரவில் ராமநாதபுரம் கமிஷனர் (பொ) பிரபாகரன் தலைமையில், டி.எஸ்.பி., சுகுமாறன் பாதுகாப்பில் கோயிலை இடிக்க இயந்திரத்துடன் நேற்று காலை வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் நிர்வாகிகள், அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் கோயில் அருகே தரையில் அமர்ந்த தர்ணா போராட்டத்தில் ஈடுப் பட்டனர்.
அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஒருவாரம் அவகாசம் வழங்கப்பட்டு இடிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், கோயில் தனியார் பெயரில் உள்ளதற்கான ஆதாரத்துடன் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
சிலரின் துாண்டுதல் காரணமாக அதிகாரிகள் கோயிலை இடிக்க முயற்சி செய்கின்றனர். த.வெ.க., அரசு கோயில்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றனர்
