ADDED : நவ 14, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே மண்மலகரையை சேர்ந்தவர் நதியா 45. தற்போது எம்.ஆர்.பட்டினத்தில் குடி யிருக்கிறார்.
நவ.,10 காலை 7:00 மணிக்கு மறதியாக கதவை திறந்து வைத்து விட்டு 100 நாள் வேலைக்கு சென்றார்.
மதியம் திரும்பி வந்து பார்த்த போது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த நதியா நகை இருந்த இடத்தை பார்த்த போது பன்னிரெண்டரை பவுன் நகை திருடு போயிருந்தது.
நதியா புகாரில் தொண்டி எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் அதே பகுதியில் வசிக்கும் மருதுபாண்டியன் 27, என்பவரை கைது செய்தனர்.
நதியாவின் உறவினரான மருதுபாண்டியன் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம்.
இதில் நகை இருக்கும் இடத்தை நோட்டமிட்ட மருதுபாண்டியன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருடியது தெரிந்தது.
மருதுபாண்டியனிட மிருந்து போலீசார் நகையை கைப்பற்றினர்.

