/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மங்களேஸ்வரி நகர் -நாச்சம்மைவாடி ரோடு சேதம்
/
மங்களேஸ்வரி நகர் -நாச்சம்மைவாடி ரோடு சேதம்
ADDED : நவ 14, 2025 04:02 AM

கீழக்கரை: நவ. 13--: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களேஸ்வரி நகர் முதல் ஏர்வாடி ஊராட்சியின் தொடக்கப்பகுதியான நாச்சம்மை வாடி வரை 4 கி.மீ.,க்கு சாலை வசதி இன்றி மண்மேவி காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
மங்களேஸ்வரி கிராமத் தலைவர் சிவக்குமார்:
மங்களேஸ்வரி நகரில் இருந்தும், கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாடி ஊராட்சி நாச்சம்மை வாடி பகுதியில் ரோட்டில் 4 கி.மீ., தொலைவிற்கு சேதமடைந்த சாலையால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிரமத்தை பொதுமக்களும் மாணவர்கள் சந்தித்து வருகின்றனர். டூவீலர் கூட செல்ல முடியாத அளவிற்கு மணல் சாலையாகவே உள்ளது.
மங்களேஸ்வரி நகர் முதல் நாச்சம்மை வாடி வரை 4 கி.மீ., சாலையை சீரமைக்க வேண்டும். இரு ஊராட்சிகளின் தனி அலுவலர்கள் ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.

