ADDED : ஜூலை 08, 2026 02:36 AM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே குடிசை வீட்டை எரித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தொண்டி அருகே சோலியக்குடி எம்.வி.பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி 43. கூலி வேலை செய்கிறார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற நேரத்தில் இவருக்கு சொந்தமான குடிசை வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இதில் பீரோ போன்ற பல பொருட்கள் எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். பாண்டீஸ்வரி புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
