/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
n ராமநாதபுரத்தில் ஒரு மாதத்தில் 45 பேருக்கு பாதிப்பு பரவுது டெங்கு கொசுத்தொல்லை அதிகரிப்பால் நோய் அபாயம்

ADDED : டிச 07, 2025 09:07 AM
ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை தொடர்வதால் இருமல், சளி, காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தனியார், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நவ.,ல் மட்டும் ராமநாதபுரம் சுகாதார மாவட்டத்தில் 12 பேர், பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் 33 பேர் என 45 பேர் டெங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 904 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1500 மி.மீ., வரை மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள், பள்ளங்கள், ரோட்டோரம் உள்ள குப்பை கிடங்கில் மழைநீர் தேங்கியுள்ளது.
அவ்வாறு தேங்கிய மழைநீரில் கொசு உற்பத்தியாவதால் வரும் நாட்களில் நோய் பரவும் அபாயம் உள்ளது. வீடுகள் தோறும் கொசுமருந்து தெளிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:
வீடுகளின் முன் குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய பொருட்களில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உருவாகும் அபாயம் உள்ளது. இதுபோன்ற பொருட்களை அகற்ற உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அரசு மருத்துவமனையிலோ அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலோ சிகிச்சை பெற வேண்டும்.
தன்னிச்சையாக மருந்து கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே போல் டெங்கு பரவல் தற்போது வரை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் சுகாதாரத்துறை மூலம் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என்றனர்.