/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மடை, கால்வாய் துார்வாரப்படாததால் தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல்
/
மடை, கால்வாய் துார்வாரப்படாததால் தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல்
மடை, கால்வாய் துார்வாரப்படாததால் தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல்
மடை, கால்வாய் துார்வாரப்படாததால் தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல்
ADDED : நவ 14, 2025 11:02 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தேரிருவேலி சின்ன கண்மாயில் தண்ணீர் தேங்கி இருந்தும் மடை, கால்வாய் துார்வாரப்படாததால் வயலுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப் படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே தேரிருவேலி அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் சின்ன கண்மாய், பெரிய கண்மாய் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மடை, கால்வாய்கள் முறையாக துார்வாரப்படாததால் விவசாயிகள் தண்ணீர் கொண்டு செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
தேரிருவேலி சுற்றியுள்ள பகுதிகளில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது பெய்த மழையில் சின்ன கண்மாயில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த தண்ணீரை பயன்படுத்தி 200 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் செய்கின்றனர்.
இப்பகுதியில் சின்ன கண்மாயில் இருந்து செல்லக்கூடிய ஆலமரத்து மடை, சுடுகாட்டு மடை, மடக்கரையான் கோயில் மடை, வரத்து கால்வாய்கள் முறையாக துார்வாரப்படாததால் மணல் மேடாகி இருப்பதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
கண்மாயில் தண்ணீர் தேங்கி இருந்தும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத அவல நிலை தொடர்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே விவசாயி களின் நலன் கருதி மடை, கால்வாய்களை முறையாக துார்வாரி தண்ணீர் கொண்டு செல்வதற்கு வசதியாக பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

