/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கலை பயிற்சி மாணவர் சேர்க்கையில் மாநிலத்தில் ராமநாதபுரம் 2ம் இடம்
/
கலை பயிற்சி மாணவர் சேர்க்கையில் மாநிலத்தில் ராமநாதபுரம் 2ம் இடம்
கலை பயிற்சி மாணவர் சேர்க்கையில் மாநிலத்தில் ராமநாதபுரம் 2ம் இடம்
கலை பயிற்சி மாணவர் சேர்க்கையில் மாநிலத்தில் ராமநாதபுரம் 2ம் இடம்
ADDED : நவ 14, 2025 11:02 PM

ராமநாதபுரம்: பகுதிநேர நாட்டுப்புற கலைபயிற்சி மாணவர் சேர்க்கையில் மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 2ம் இடம் பெற்றுள்ளது.
2024ல் பகுதி நேர கலைப்பயிற்சி மையங்களில் குறைந்த பட்சம் நான்கு கலைகளை பயிற்றுவிக்கும் வகையில் பாடல் கலைகள், ஆட்டக் கலைகள், கருவி இசை கலைகள், வீரக்கலைகள், நாடகக் கலைகள் என 30 வகையான கலைப் பயிற்சி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய பாடல் ஆகிய நான்கு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டன.
சிலம்பாட்டத்தில் 83, ஒயிலாட்டத்தில் 37, கிராமிய பாடல்களில் 20, கரகாட்டம் 11 என 151 மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.இவர்களுக்கான செய்முறை, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் நடந்தது.
இதில் பகுதி நேர நாட்டுபுற கலைபயிற்சிக்கு 223 மாணவர்களை சேர்த்து மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் 2ம் இடம் பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கலை பண்பாட்டுதுறையினர், மாணவர்கள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் வாழ்த்து பெற்றனர். ஒயிலாட்ட ஆசிரியர் ராமகிருஷ்ணன், மற்றும் சிலம்பாட்ட ஆசிரியர் தனசேகரன், ஒருங்கிணைப்பாளர் லோகசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

