ADDED : ஜூலை 03, 2026 11:41 PM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: சூறாவளி காற்றால் ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
சில நாட்களாக வீசும் தென்மேற்கு பருவக்காற்று தற்போது தீவிரமடைந்து ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளியாகி மாறி உள்ளது. இதனால் ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுகிறது.
இதை தொடர்ந்து இன்று (ஜூலை 4) மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் 1200 விசைப்படகு, நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
