ADDED : நவ 14, 2025 11:03 PM
பரமக்குடி: பரமக்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அங்குசாமி, துணை செயலாளர் வீராச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ரோனிக்கம் வரவேற்றார்.
செயலாளர் முரளீதரன் தீர்மானங்களை வாசித்தார்.
தமிழக அரசு 2025 ஜூலை முதல் பண பயனுடன் கூடிய அகவிலைப்படி வழங்க வேண்டும்.
மருத்துவ செலவுத் தொகையை கால தாமதம் இன்றி காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் பரமக்குடியில் நின்று செல்ல வேண்டும்.
பரமக்குடி அரசு மாவட்ட மருத்துவமனையை விரைந்து தரம் உயர்த்தி ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் படுக்கை வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
பொருளாளர் பாண்டி நன்றி கூறினார்.

