தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ரோட்டோர பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

ரோட்டோர பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

ரோட்டோர பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்


UPDATED : அக் 31, 2026 12:00 AM

ADDED : அக் 30, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:00 AM ADDED : அக் 30, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை– திருவெற்றியூர் சாலையில் குளத்துார் பஸ்ஸ்டாப் அருகே பள்ளம் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். திருவாடானை– திருவெற்றியூர் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. குளத்துார் பஸ்ஸ்டாப் அருகே குடிநீர் வடிகால் வாரிய பணிகள் காரணமாக சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டது.

இப்பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் பள்ளம் முழுமையாக மூடப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.

கம்பு மட்டும் நட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் டூவீலர்களில் செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us