/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆன்லைன் மோசடியில் ரூ.10.92 லட்சம் மீட்பு
/
ஆன்லைன் மோசடியில் ரூ.10.92 லட்சம் மீட்பு
ADDED : டிச 02, 2025 06:24 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமூக வலைதளத்தில் ஆன்லைன் டிரேடிங் விளம்பரத்தை பார்த்து முதலீடு செய்ய திட்டமிட்டார்.
அவரை தொடர்பு கொண்ட சிலர் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என ஆசை காட்டியுள்ளனர்.
அதை நம்பி ரூ.11 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். எவ்வித லாபமும் வராமல் மேற்கொண்டு பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த வாலிபர் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வாலிபர் அனுப்பிய கணக்கில் இருந்து ரூ.10.92 லட்சத்தை மீட்டு ஒப்படைத்தனர். சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி அதிகாரப்பூர்வம் இல்லாத டிரேடிங் செயலிகளில் முதலீடு செய்யக்கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

