/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை அணை நீர் திறக்க வலியுறுத்தல்
/
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை அணை நீர் திறக்க வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை அணை நீர் திறக்க வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை அணை நீர் திறக்க வலியுறுத்தல்
ADDED : நவ 14, 2025 04:16 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை அணை நீரை திறக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் விவசாய சங்க பிரதிநிதிகள் மனு அளித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் மழைக் காலங்களில் தேக்கப்படும் 1205 மில்லியன் கன அடி நீரால் பெரிய கண்மாய் பாசனத்தில் 12,142 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கண்மாயில் கடந்த மாதம் பெய்த பருவ மழையால் 2 அடிக்கும் குறைவான தண்ணீர் மட்டுமே தேங்கியது. 20 நாட்களாக மழையின்றி தொடர் வறட்சியால் நெற்பயிர்கள் பாதிப்படைந்ததால் பெரிய கண்மாய் பாசன மடைகள் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் கண்மாயில் தேங்கிய தண்ணீரும் வேகமாக காலியாகி தற்போது ஒரு அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. தற்போது கண்மாயில் உள்ள தண்ணீரை மட்டும் பயன்படுத்தி பாசன விவசாயிகள் முழுமையாக நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே முழுமையான விவசாயத்தை பெறக்கூடிய சூழல் உள்ளது.
இதை வலியுறுத்தி பெரிய கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் வன்மீக நாதன் தலைமையில் விவசாயிகள் நேற்று கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்து வைகை நீரை திறக்க வலியுறுத்தினர். உடன், முன்னாள் பெரிய கண்மாய் பாசன சங்க தலைவர் தனபாலன் உட்பட ஆட்சி மண்டல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

