/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு
/
மருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு
ADDED : டிச 09, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாடானை வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள மருந்து எடுக்கும் அறையில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது நேற்று மாலை 6:00 மணிக்கு கொம்பேரி மூக்கன் பாம்பு புகுந்துள்ளது.
பாம்பை பார்த்ததும் செவிலியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அனைவரும் வெளியேறியதுடன் திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். நிலைய அலுவலர் முருகானந்தம், வீரர்கள் சென்று பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

