/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை தினமலர் செய்தி எதிரொலி
/
உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை தினமலர் செய்தி எதிரொலி
உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை தினமலர் செய்தி எதிரொலி
உரங்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை தினமலர் செய்தி எதிரொலி
ADDED : டிச 07, 2025 09:06 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், மிளகாய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால் தற்போது விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வேளாண் உதவி இயக்குநர் கேசவராமன் கூறியதாவது:
முதுகுளத்துார் வட்டாரத்தில் ஒரே நேரத்தில் அனைத்து விவசாயிகளும் கடைகளில் உரம் கேட்டு வந்ததால் உரம் மூடைகள் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டது.
மாவட்ட அதிகாரிகள் உத்தரவின் பேரில் மதுரை கூடல்நகர் குட்செட்டில் இருந்து முதுகுளத்துார் வட்டாரத்தில் உள்ள 16 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உரம் மூடைகள் இறக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் சில்லரை உரம் விற்பனை நிலையங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை 2773 டன் யூரியா, 394 டன் டி.ஏ.பி., 12 டன் பொட்டாஷ், 481 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உரங்கள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், சில்லரை விற்பனை நிலையங்களை அணுகி தேவையான உரம் மூடைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் டிட்வா புயல் காரணமாக குஜராத் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட உரங்கள் சென்னையில் உள்ள துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டதால் உரங்கள் கிடைக்க சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்களில் தேவைக்கேற்ப கூடுதலாக உரங்கள் வினியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

