தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பஸ்ஸ்டாண்டில் பல ஆண்டாக பூட்டி வைத்திருந்த கழிப்பறை: அமைச்சர் உத்தரவால் பயன்பாட்டிற்கு வந்தது

பஸ்ஸ்டாண்டில் பல ஆண்டாக பூட்டி வைத்திருந்த கழிப்பறை: அமைச்சர் உத்தரவால் பயன்பாட்டிற்கு வந்தது

பஸ்ஸ்டாண்டில் பல ஆண்டாக பூட்டி வைத்திருந்த கழிப்பறை: அமைச்சர் உத்தரவால் பயன்பாட்டிற்கு வந்தது


UPDATED : ஜூலை 08, 2026 04:07 PM

ADDED : ஜூலை 08, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2026 04:07 PM ADDED : ஜூலை 08, 2026 03:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை பஸ்ஸ்டாண்டில் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த இலவச கழிப்பறை அமைச்சர் ராஜிவ் உத்தரவால் பயன்பாட்டிற்கு வந்தது. திருவாடானை பஸ்ஸ்டாண்டில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் இலவச கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த கழிப்றைகள் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் பயணிகள் கட்டண கழிப்பறையை நோக்கி சென்றனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் திருவாடானை பகுதியில் சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜிவ் ஆய்வு செய்தார். பஸ்ஸ்டாண்டை ஆய்வு செய்த அவர் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த கழிப்பறையை கண்டு கடும் அதிருப்தியடைந்தார். மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கட்டடம் இப்படி பூட்டப்பட்டிருப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறிய அமைச்சர் அங்கிருந்து உள்ளாட்சி அதிகாரிகளிடம் உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக குழாய்கள், கதவுகள், வர்ணம் பூசுதல் என கழிப்பறை வளாகம் புதுப் பொலிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த கழிப்பறை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலாவது இதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us