/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரம் வேளாண் கூட்டுறவு வங்கியில் செயலாளர் இல்லை : விவசாயிகள் பாதிப்பு

ADDED : நவ 14, 2025 11:03 PM
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆறு மாதங்களாக செயலாளர் பணியிடம் காலியாக உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, நயினாமரைக்கான், பத்திராதரவை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ரெகுநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் பயனாளிகளாக உள்ளனர். இந்த சங்கத்தின் செயலாளர் பணியிடம் 6 மாதமாக காலியாக இருப்பதால் பொறுப்பு அலுவலர் நிர்வகிக்கிறார்.
விவசாயிகள் கூறுகையில், ரெகுநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 12 பேருக்கும் அதிகமான விவசாயிகள் ரெகுநாதபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். விவசாய கடன் பெறுவதற்கும் பயிர் காப்பீட்டு தொகை பெறுவதற்கும், உரமிடுதல் உள்ளிட்ட கூட்டுறவு கடன் சார்ந்த வேலை களுக்கு வங்கியை அணுகும் நிலை உள்ளது.
செயலாளர் இல்லாததால் ஒரு வேலையை முடிக்க ஐந்து நாட்களுக்கு மேலாக அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. விவசாய வேலைகளை கிடப்பில் போட்டுவிட்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து காத்திருக்க வேண்டியுள்ளது.
எனவே மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கூடுதல் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.