/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்தப்பட்ட 2813 கி., பீடி இலை பறிமுதல் மூன்று பேர் கைது

ADDED : பிப் 19, 2025 01:41 AM

ராமநாதபுரம்,:ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கன்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட 2813 கிலோ பீடி இலைகள், பதப்படுத்தப்பட்ட 47 சுறா இறக்கைகளை பறிமுதல் செய்து மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பீடி இலைகளை சிலர் இலங்கைக்கு கடத்த உள்ளதாக எஸ்.பி., சந்தீஷூக்கு தகவல் கிடைத்தது. அவரது அறிவுரையின் பேரில் பிப்.,16ல் ராமநாதபுரம் அருகே இடையர்வலசை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கன்டெய்னர் லாரியில் இருந்த 1680 கிலோ பீடி இலைகள்பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரும் உரிமையாளருமான மண்டபம் மேற்கு தெரு சலீம் மாலிக் 35, உடந்தையாக இருந்த முகமது ஹக்கீம் 30, ஆகியோரை போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் நேற்று (பிப்.,18) ராமநாதபுரம் சேதுபதிநகர் விஜய் ஆனந்த் 42, வீட்டில் பதுக்கிய 1133 கிலோ பீடி இலைகள் மற்றும் மருந்துகள் தயாரிக்க பயன்படும் 47 பதப்படுத்தப்பட்ட சுறாமீன் இறக்கைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.