/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய்களில் குறைந்து வரும் தண்ணீர்
/
கண்மாய்களில் குறைந்து வரும் தண்ணீர்
ADDED : நவ 14, 2025 04:04 AM
ஆர்.எஸ்.மங்கலம்: போதிய மழையின்றி ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் கண்மாய், குளங்களில் உள்ள தண்ணீர் வேகமாக குறைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் உட்பட 250 க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்கள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பெரும்பாலான சிறிய கண்மாய்களில் பாதி அளவு தண்ணீர் தேங்கியது.
அதன் பின் தொடர் வறட்சியால் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களும் கருகி வருவதால் அவற்றை காப்பாற்ற கண்மாய் தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர். இதனால் கண்மாய்களில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது.
மேலும் பாசனத்துக்கு திறக்கப்படாத சில கண்மாய்களிலும் வறட்சியால் தண்ணீர் வேகமாக காலியாகி வருகிறது.
இதனால், விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்து பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

