நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய த.வெ.க., நிர்வாகி மீது பெண் புகார்
நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய த.வெ.க., நிர்வாகி மீது பெண் புகார்
ADDED : ஜூலை 24, 2026 12:03 AM

ராணிப்பேட்டை: ஆபாச வீடியோ எடுத்து, தன்னை மிரட்டுவதாக த.வெ.க., நிர்வாகி, விஜய் மோகன், 40, என்பவர் மீது, 34 வயது பெண் புகார் அளித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண், முதல்வர் தனிப்பிரிவில் நேற்று முன்தினம் அளித்த புகார் மனு:
த.வெ.க.,வில் இணைய, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் விஜய் மோகனை, 1 0 மாதங்களுக்கு முன் அணுகினேன். அதன்பின், 'இன்ஸ்டா'வில் எனக்கு மெசேஜ் செய்தவர், பதவி தருவதாக கூறி, ஆசை வார்த்தை கூறி, என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்தார்.
இதுகுறித்து, ராணிப்பேட்டை த.வெ.க., - எம்.எல்.ஏ., தாஹிராவிடம் தெரிவித்தேன். அவர், விஜய் மோகனை அழைத்து, வீடியோவை அழித்துவிடுமாறு அறிவுறுத்தினார்.
ஆனால், அந்த வீடியோவை வைத்துகொண்டு, விஜய் மோகன் தொடர் மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.
ஆற்காடு டவுன் போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை நேற்று அழைத்து விசாரித்தனர்.
