/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்விளக்கு பொருத்தக்கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
/
மின்விளக்கு பொருத்தக்கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
மின்விளக்கு பொருத்தக்கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
மின்விளக்கு பொருத்தக்கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
ADDED : ஜன 11, 2025 01:50 AM
மின்விளக்கு பொருத்தக்கோரி பிச்சை எடுக்கும் போராட்டம்
இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சி கவுண்டம்பட்டி புதுப்பாலம் பகுதியில் மது அருந்துவோர், தெரு விளக்கை உடைத்து விடுகின்றனர். இதனால் அந்த பாலத்தில் ஓராண்டுக்கும் மேலாக
மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழந்துள்ளது. அங்கு மின்விளக்குகள் பொருத்தக்கோரி, மக்கள், பா.ஜ.,வினர் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இடைப்பாடி நகர பா.ஜ., தலைவர் சந்திரன் தலைமையில் அக்கட்சியினர், நகராட்சி அலுவலகம் முன், நேற்று, பாலத்தில் மின்விளக்கு பொருத்தக்கோரி மண்டியிட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். அரை மணி நேரம் போராட்டம் நடத்திவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர்.