/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்து காப்பீடு பதிவு முகாம் இன்றுடன் நிறைவு
/
விபத்து காப்பீடு பதிவு முகாம் இன்றுடன் நிறைவு
ADDED : பிப் 28, 2025 01:33 AM
விபத்து காப்பீடு பதிவு முகாம் இன்றுடன் நிறைவு
சேலம்:இந்திய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி இணைந்து, விபத்து காப்பீடு பதிவு வாரத்தை, கடந்த, 24ல் தொடங்கி, இன்று வரை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதில், 18 முதல், 65 வயதுக்குட்பட்டோர் இணையலாம். இதற்கு ஆதார், வாரிசுதாரரின் மொபைல் எண், நாமினி எண் ஆகிய விபரங்களை கொண்டு வரவேண்டும்.
அதில், 559 ப்ரீமிய தொகைக்கு, 10 லட்சம் காப்பீடு, 799 ப்ரீமிய தொகைக்கு, 15 லட்சம் காப்பீடு திட்டத்தில் சேரலாம். தபால்காரர்கள் கொண்டு வரும், 'ஸ்மார்ட் போன்' அல்லது விரல் ரேகை மூலம், 5 நிமிடத்தில் டிஜிட்டல் முறையில் பாலிசி வழங்கப்படும். இதற்கு சிறப்பு முகாம், இன்றுடன் முடிவதால், வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள, சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

