ADDED : செப் 02, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு:மா.கம்யூ.,
சார்பில், ஏற்காடில் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடந்தது.
தாலுகா செயலர் நேரு தலைமை வகித்தார்.
அதில் ஏற்காடில் பட்டா
இல்லாதவர்களுக்கு வழங்குதல்; அரசு மருத்துவமனையில் ஊழியர்களை
அதிகப்படுத்தல்; பழைய எக்ஸ்ரே இயந்திரத்தை மாற்றி புது டிஜிட்டல்
இயந்திரம் அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய
நோட்டீசை, மக்களுக்கு வினியோகித்து அதுகுறித்து விளக்கம்
அளித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவி, ஒன்றிய குழு
உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
