ADDED : டிச 07, 2025 08:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் நகராட்சி, 18வது வார்டில், 4.67 கோடி ரூபாய் செலவில் புதிதாக நகராட்சி அலுவலகம், தினசரி சந்தையில், 77 லட்சம் ரூபாய் செலவில் கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதற்கான பூமி பூஜை விழா, துாக்கனாம்பட்டி தினசரி சந்-தையில் நேற்று நடந்தது. தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி தலைமை வகித்து, பணியை தொடங்கி-வைத்தார். பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., சதாசிவம், நகராட்சி தலைவர் சந்திரா உள்ளிட்ட கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

