/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டர் ஆபீசுக்கு மீண்டும் குண்டு மிரட்டல்
/
கலெக்டர் ஆபீசுக்கு மீண்டும் குண்டு மிரட்டல்
ADDED : நவ 15, 2025 01:41 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு, நேற்று வந்த இ - மெயிலில், 'சேலம், கோவை, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவல-கங்கள், கோவை கமிஷனர் அலுவலகத்தில் மதியம், 1:00 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கும்' என குறிப்பிடப்பட்டி-ருந்தது.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சேலம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு இன்ஸ்-பெக்டர் கோவிந்த ராஜ் தலைமையில் போலீசார், மோப்ப நாய் ரூபி, மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன், சேலம் கலெக்டர் அலு-வலகம் வந்து, வாகன நிறுத்துமிடம் உள்பட, அனைத்து பகுதிக-ளிலும், சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தின், 4 தளங்-களின், அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. எங்கும் குண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே இது-போன்று, 3 முறை மிரட்டல் வந்துள்ளது. 4ம் முறை, நேற்று வந்த மிரட்டலும் புரளி என தெரிந்தது. இ - மெயில் அனுப்பி-யது யார் என, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

