செங்கலால் கொத்தனார் மண்டை உடைப்பு டீ மாஸ்டர் உள்பட 2 பேர் மீது வழக்கு
செங்கலால் கொத்தனார் மண்டை உடைப்பு டீ மாஸ்டர் உள்பட 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 08, 2026 04:35 AM
வாழப்பாடி:அயோத்தியாப்பட்டணம்
அருகே வலசையூரை சேர்ந்த கொத்தனார் சக்தி, 37. இவரது சகோதரர்,
ஓட்டல் உரிமையாளர் சிபி சக்கரவர்த்தி, 31. இவரது நண்பர், கல்லுாரி
மாணவர் மிதுலேஷ், 22.
இவர்கள், வாழப்பாடி, புதுப்பாளையத்தில் உள்ள
டீக்கடைக்கு நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு சென்றனர்.
தொடர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு பணிபுரியும், புதுப்பாளையத்தை சேர்ந்த, டீ மாஸ்டர் மூர்த்தி, 42,அவரது
மகனான கூலித்தொழிலாளி விஷ்வா, 23, ஆகியோருடன் தகராறு
ஏற்பட்டுள்ளது. இதில் சக்தி மண்டை உடைந்துள்ளது. அவர் புகார்படி,
வாழப்பாடி போலீசார், மூர்த்தி, விஷ்வா மீது வழக்குப்பதிந்தனர்.
இதுகுறித்து
போலீசார் கூறியதாவது: மூர்த்தி, 'போதை'யில் இருந்த நிலையில், அதே
கடையில் பணிபுரியும் மற்றொரு பெண்ணிடம் வாக்குவாதத்தில்
ஈடுபட்டார். அப்போது டீ குடித்துக் கொண்டிருந்த சக்தி உள்பட, 3
பேரிடம், 'நீங்கள் என்னடா வேடிக்கை பார்க்கிறீர்கள்' என, மூர்த்தி
கேட்டு தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரது மகன் விஷ்வாவுக்கு,
மொபைல் போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தார். பின், தந்தை, மகன் சேர்ந்து, 3
பேரையும் தாக்கினர். செங்கலால் சக்தி தலையில் பலமாக தாக்கினர்.
சக்தியின் மண்டை உடைந்தது. மிதுலேஷ் கைவிரலை கடித்தனர். இருவரும்
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின் சக்தி,
மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
