தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/வாடகை கார்களை அடமானம் வைத்து ரூ.16 லட்சம் வாங்கியவர் மீது வழக்கு

வாடகை கார்களை அடமானம் வைத்து ரூ.16 லட்சம் வாங்கியவர் மீது வழக்கு

வாடகை கார்களை அடமானம் வைத்து ரூ.16 லட்சம் வாங்கியவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 08, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 04:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம், வீராணம், அல்லிக்குட்டையை சேர்ந்தவர் விக்னேஷ், 27. இவர், 'தார்' ஜீப் வைத்துள்ளார். இவரது நண்பர் ராகுல்ராஜ். இவர், 'கியா' கார் வைத்துள்ளார்.

இரு வாகனங்களையும், சூரமங்கலத்தை சேர்ந்த ரித்திக் ரோஷன், கடந்த பிப்., 22ல், வாடகை பேசி குத்தகைக்கு எடுத்துள்ளார். 3 மாதங்கள் வாடகை கொடுத்த அவர், பின் தரவில்லை. இதுகுறித்து விக்னேஷ் கேட்டும் பலனில்லை.

கடந்த மாதம், 9ல் கள்ளக்குறிச்சியில் கார் இருந்தபோது, ஜி.பி.எஸ்., இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மொபைல் போனுக்கு குறுந்தகவல் வந்ததால், அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், கள்ளக்குறிச்சி சென்று விசாரித்தார். அப்போது ரித்திக் ரோஷன், அவரது நண்பர் செல்வத்திடம், ஜீப்பை, 7 லட்சம் ரூபாய்க்கும், காரை, 9 லட்சம் ரூபாய்க்கும் அடமானம் வைத்தது தெரிந்தது.

இதனால் விக்னேஷ் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், ரித்திக் ரோஷன், செல்வம் மீது வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து போலீசார், கள்ளக்குறிச்சி ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், செல்வம் கட்டுப்பாட்டில் இருந்த இரு வாகனங்களையும் மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us