தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ரூ.10 லட்சம் மோசடி: தம்பதிக்கு வலை

ரூ.10 லட்சம் மோசடி: தம்பதிக்கு வலை

ரூ.10 லட்சம் மோசடி: தம்பதிக்கு வலை


ADDED : ஜூலை 03, 2026 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 02:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், சித்தர்கோவிலை சேர்ந்தவர் மாரியப்பன், 52. கட்டட தொழிலாளி. இவரது மனைவி பத்மா. மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராக பணிபுரிகிறார்.

அதே சுகாதார நிலையத்தில், சித்தர்கோவிலை சேர்ந்த தங்க-ராஜின் மனைவி கவிதாவும் செவிலியராக உள்ளார்.தங்கராஜ், 'உங்கள் மகனுக்கு நெய்வேலி அனல் மின் நிலை-யத்தில் வேலை வாங்கி தருகிறேன்' என, மாரியப்பனிடம் தெரி-வித்தார். அதை நம்பிய அவர், நகை, வங்கியில் சேமித்து வைத்-தது உள்ளிட்டவை மூலம், 10 லட்சம் ரூபாயை, 2016 ஜூன், 10ல் சேலம் ஏ.வி.ஆர்., ரவுண்டானா அருகே, தங்கராஜிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து மாரியப்பன் பலமுறை கேட்டபோதும், மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இப்படி, 10 ஆண்டுகளை கடந்த நிலையில், பணத்தை திருப்பி தரும்படி மாரியப்பன் கேட்க, தரமுடியாது என கூறி தங்கராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். ஏமாற்றப்பட்டதை அறிந்த மாரியப்பன், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

விசாரித்த போலீசார், தங்கராஜ், கவிதா மீது, மோசடி, கொலை மிரட்டல் உள்பட, 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து, அவர்களை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us