/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிக்கிய போதை மாத்திரை ஆய்வுக்கு அனுப்ப முடிவு
/
சிக்கிய போதை மாத்திரை ஆய்வுக்கு அனுப்ப முடிவு
ADDED : டிச 02, 2025 02:19 AM
சேலம், சேலம் மத்திய சிறையில் கடந்த, 28ல் சிறைவார்டன் செல்வராசுவிடம் இருந்து இரண்டு பொட்டலங்களில் 3 மொபைல்போன், 80 கிராம் கஞ்சா, 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை அனைத்தும் அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டு, செல்வராசு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து செல்வராசுவிடம் நடத்திய விசாரணையில், எனது பேக்கில் எப்படி இந்த பொருட்கள் வந்தது என தெரியாது என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் அவை ஜாமினில் விடுவித்தனர்.
இந்நிலையில், போதை மாத்திரைகளை லேபிற்கு அனுப்பி வைத்து, ஆய்வுக்கு உட்படுத்தப்படும். போதை மாத்திரை என்பது தெரியவந்தால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

