தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ போலி ஆவணம் மூலம் நிலமோசடி 9ல் அறநிலையத்துறை விசாரணை

போலி ஆவணம் மூலம் நிலமோசடி 9ல் அறநிலையத்துறை விசாரணை

போலி ஆவணம் மூலம் நிலமோசடி 9ல் அறநிலையத்துறை விசாரணை


ADDED : ஜூலை 04, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் சந்தர். இவருக்கு, ஆனந்தா பாலம், நந்தவனம் செல்லும் பகுதி யில், 2,200 சதுர அடி நிலம் உள்-ளது. அந்த நிலத்தை, செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஜெயக்குமார், ரங்கசாமி, போலி ஆவணங்கள் மூலம் வேணு-கோபால சுவாமி தேவஸ்தானத்துக்கு வாடகைக்கு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து சந்தர், சென்னை உயர்நீதிமன்-றத்தில் மனுதாக்கல் செய்தார். விசாரித்த நீதி-மன்றம், அறிக்கை தாக்கல் செய்ய, இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு உத்த-ரவிட்டது. இதனால் வரும், 9 காலை, 11:30 மணிக்கு, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில், விசாரணை நடக்க உள்ளது.அதில் பங்கேற்க, நிலப்பிரச்னையில் தொடர்பு-டையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்-ளது. அதில், 'சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய ஆவ-ணங்களுடன் ஆஜராக வேண்டும். தவறினால் இருக்கிற ஆவணங்களின் அடிப்படையில் உத்த-ரவு பிறப்பிக்கப்படும்' என, இணை கமிஷனர் ரத்-தினவேல் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us