ADDED : நவ 15, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: உலக சர்க்கரை நோய் தினத்தை ஒட்டி, சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சர்க்கரை நோய், பொது மருத்துவத்-துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
அதில் டீன் தேவி மீனாள், சர்க்கரை நோய் பாதிப்பை தடுப்பது, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, உணவு முறை உள்ளிட்-டவை குறித்து பேசினார்.தொடர்ந்து மருத்துவ மாணவர்களுக்கு வினாடி - வினா போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. துறைத்-தலைவர் பிரகாஷ், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், பொது மருத்துவத்துறை தலைவர் சுரேஷ்கண்ணா, முதுகலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் பங்கேற்-றனர்.

