ADDED : ஜூலை 09, 2026 01:57 AM
இடைப்பாடி: சேலம், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு பஸ், நேற்று முன்-தினம் இரவு, இடைப்பாடிக்கு புறப்பட்டது. மகுடஞ்சாவடியை சேர்ந்த சந்திரசேகர், 30, கண்டக்டராக இருந்தார். சேலம் கலெக்டர் அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக பணிபு-ரியும், இடைப்
பாடியை சேர்ந்த பிரியதர்ஷினி, அவரது மகன் மதீஸ்வரன் ஏறினர். அமர இடம் கேட்டது தொடர்பாக, பிரியதர்ஷினி, கண்-டக்டர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து பிரியதர்-ஷினி, உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
இரவு, 11:00 மணிக்கு பஸ் இடைப்பாடி வந்தது. அங்கு தயாராக காத்திருந்த, பிரியதர்ஷினியின் உறவினர்கள், கண்டக்டரை சரமாரி-யாக தாக்கினர். பதிலுக்கு பிரியதர்ஷினியை, கண்டக்டர் தாக்-கினார். கண்டக்டர், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். பிரியதர்ஷினியும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கண்டக்டரை பெண் தாக்கிய வீடியோ பரவியது. கண்-டக்டர் புகாரில் பிரியதர்ஷினி, மதீஸ்வரன் உள்பட, 6 பேர் மீதும், பிரியதர்ஷினி புகாரில் கண்டக்டர் மீதும் வழக்குப்பதிந்து, இடைப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
