தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின் சாதனங்கள் திருட்டு வாரிய பொருத்துனர் கைது

மின் சாதனங்கள் திருட்டு வாரிய பொருத்துனர் கைது

மின் சாதனங்கள் திருட்டு வாரிய பொருத்துனர் கைது


ADDED : ஜூலை 02, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர், 4 ரோடு அருகே நீர்வளத்துறைக்கு சொந்தமான பழைய ஆய்வு மாளிகை உள்ளது. ஆனால் பயன்பாட்டில் இல்லை. அந்த வளாகத்தில் கடந்த, 30ல், சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதாக, அருகே உள்ள கடைக்காரர் கவுரிசங்கர், நீர்வளத்துறை உதவி பொறியாளர் பிரசாந்துக்கு(கட்டடம்) தகவல் கொடுத்தார். அவர் உள்ளிட்ட பணியாளர்கள், அங்கு சென்று பார்வையிட்ட-போது, மின்மோட்டார், 7 காயில் ஒயர், இரு டியூப் லைட் என, 17,500 ரூபாய் மதிப்பில், மின்தளவாடங்கள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து பிரசாந்த் புகார்படி, மேட்டூர் போலீசார் விசாரித்தனர்.

அதில் ஆய்வு மாளிகைக்குள் புகுந்து மின்சாதனங்களை திருடியது, மேட்டூர் அணை மின் நிலைய பொருத்-துனர் ராஜ்குமார், 32, மற்றும் பாரதி நகர் சரத்குமார், 33, காளி-யம்மன் கோவில் தெரு பிரவீன்குமார், 30, என்பதும், அவர்கள் மது அருந்துவதற்காக திருடியதும் தெரிந்தது. இதனால் அவர்-களை, போலீசார் கைது செய்தனர்.கட்டடத்தில் பதித்த ஒயர்களை

திருடிய 2 பேர் சிக்கினர்

சேலம், அழகாபுரம் பெரியபுதுார், மிட்டாபுதுார், மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 55. இவர் மிட்டாபு-துாரில் உள்ள நிலத்தில், கட்டடம் கட்டி வருகிறார். அங்கு எலக்ட்ரிக் வேலை முடிந்து, கடந்த ஜூன், 18ல் சரவணன் வீட்-டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்தபோது, சுவரில் பைப் லைன் கொடுத்து பதிக்கப்பட்டிருந்த அனைத்து ஒயர்களும் திருடு போயிருந்தன. இதுகுறித்து சரவணன் புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரித்ததில், அம்மாபேட்டை, குஞ்சான்காடு, பாவடி பள்ளியை சேர்ந்த பிரகதீஸ்வரன், 22, பட்டைக்கோவில், குமரன் தெரு பால

கிருஷ்ணன், 26, திருடியது தெரிந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், 30,000 ரூபாய் மதிப்பில் ஒயர்களை மீட்-டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us