/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கம் கட்ட அடிக்கல்

ADDED : டிச 09, 2025 10:05 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி, சங்ககிரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் முதல்வரின் சிறு விளையாட்ட-ரங்கம் கட்ட, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்-டுத்துறையின் சார்பில், இடைப்பாடி தொகுதியில் இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு வளாகத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டவும், சங்ககிரி தொகுதியில் வடுகப்-பட்டி கிராமத்தில், 2 கோடியே, 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கம் கட்டவும், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதய-நிதி ஆகியோர் சென்னையிலிருந்து கானொலிக் வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினர்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்-ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கலெக்டர் பிருந்தாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட விளை-யாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சிவ-ரஞ்சன், இடைப்பாடி நகராட்சி தலைவர் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேம்பாலம் அமைக்க கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்